உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் ரூ.3 லட்சம் போலி எலக்ட்ரிக்கல் பொருட்கள் பறிமுதல்

சேலத்தில் ரூ.3 லட்சம் போலி எலக்ட்ரிக்கல் பொருட்கள் பறிமுதல்

சேலம்: சென்னையில் உள்ள மின் உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்தில், அங்குள்ள அசோக் நகரை சேர்ந்த சதீஷ்குமார், 38, மேலாளராக பணிபுரிகிறார். அந்த நிறுவன பெயரில், சேலம், கல்லாங்குத்து பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் போலி பொருட்கள் விற்கப்படுவதாக, சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர், அந்த கடைக்கு சென்று பார்த்தபோது, போலி எலக்ட்-ரிக்கல் பொருட்கள் விற்பது தெரிந்தது. இதுகுறித்து சதீஷ்குமார் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சேலம் டவுன் போலீசார், அந்த கடையில் சோதனை செய்தனர். அப்போது, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், போலி எலக்ட்ரிக்கல் பொருட்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை