உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்

நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்

சேலம்: நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு வகுப்-புகள் தொடக்க விழா நடந்தது.கல்லுாரி அறக்கட்டளை செயலாளர் முனைவர் குமார், கல்லுா-ரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளை வாழ்த்தி பேசினார். சென்னை மாற்றம் பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் இன்போசிஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு துறை துணைத்த-லைவர் சுஜித்குமார் பேசுகையில், ''சமுதாயத்தில் உள்ள பிரச்னை-களுக்கு பொறியியல் துறை மூலமாக தீர்வுகாண முடியும். பொறி-யியல் துறைக்கான வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. ஆங்கிலத்தில் பேசும் திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.விழாவில் பிளஸ் 2 வகுப்பில், 190 கட்ஆப் மதிப்பெண்ணிற்கு மேல் பெற்று முதலாம் ஆண்டு பொறியியல் பயில சேர்க்கை பெற்ற மாணவ மாணவிகளுக்கு, 10 லட்சம் ரூபாய் கல்வி உதவி தொகை கல்லுாரி அறக்கட்டளையால் வழங்கப்பட்டது. நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவரும், கல்லுாரியின் முதல்வருமான முனைவர் சீனி-வாசன் கல்லுாரியின் சிறப்பு, மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறு-வது எப்படி என்பது குறித்து பேசினார்.நாலெட்ஜ் கல்லுாரி அறக்கட்டளை துணை தலைவர் முத்து-சாமி, இணை செயலாளர் சிவபிரசாத், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அறக்கட்டளை உறுப்பி-னர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி