மேட்டூர் நீர்மட்டம் 4 நாளில் 2 அடி சரிவு
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த ஜூலை, 30ல், மேட்டூர் அணை நிரம்பியது. பின் கர்நா-டகா அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் அளவு குறைந்ததால் கடந்த, 9ல் நீர்மட்டம், 119 அடியாக குறைந்து மீண்டும், 12ல், 120 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, 21ல் நீர்மட்டம், 119 அடியாக குறைந்த நிலையில் நேற்று, 118.75 அடியாக சரிந்தது. 4 நாட்களில் அணை நீர்மட்டம், 2 அடி சரிந்துள்ளது.நேற்று முன்தினம் வினாடிக்கு, 6,501 கனஅடியாக இருந்த நீர்வ-ரத்து, நேற்று, 6,467 கனஅடியாக சற்று சரிந்தது. பாசனத்துக்கு வினாடிக்கு, 12,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.