உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

ஏற்காடு: ஏற்காட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்-குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் முன்னிலையில், வீட்டுமனை பட்டா கேட்டு போராட்டம் நடந்தது. எந்தவித ஆட்சேபனையும் இல்லாத அரசு நிலத்தில், 10 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் மக்களுக்கு, வீட்டு மனை பட்டா வழங்கலாம் என்று அரசு ஆணை பிறப்பித்ததை தொடர்ந்து, ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தலைமையில் ஜெரினாகாடு, முருகன் நகர், பட்டி-பாடி, அக்கரையூர் போன்ற கிராமங்களில் அரசு நிலங்களில் வசித்து வரும், 100க்கும் மேற்பட்டோர் ஏற்காடு தாசில்தார் ரமேஷ் குமாரிடம் மனு கொடுத்தனர். அரசு அறிவித்ததை போல, ஏற்காட்டில் உள்ள மக்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ