உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சோனா கலைக்கல்லுாரி முதலாண்டு தொடக்க விழா

சோனா கலைக்கல்லுாரி முதலாண்டு தொடக்க விழா

சேலம்: சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக், சோனா கலை, அறிவியல் கல்லுாரி முதலாண்டு மாணவர்களுக்கு தொடக்க விழா, நேற்று முன்-தினம் நடந்தது. பெங்களூரு பகில்ராக் கேபிடல்ஸ் சி.இ.ஓ., - நிர்வாக இயக்குனர் மனோஜ் ஷெனாய், சேலம் கோபி மருத்துவ-மனை நிர்வாக இயக்குனர் அசோக்குமார் பங்-கேற்றனர்.சோனா கல்வி குழும தலைவர் வள்ளியப்பா, முதலாண்டு மாணவ, மாணவியர், பெற்றோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.தொடர்ந்து வள்ளியப்பா பேசுகையில், ''புதிதாக சேர்ந்த மாணவர்கள், இக்கல்லுாரியில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, வாழ்வில் மென்மேலும் வளர்ந்து கல்லுாரி, பெற்றோருக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும்,'' என்றார்.கல்லுாரி துணைத்தலைவர்கள் சொக்கு, தியாகு ஆகியோர், வளர்ந்து வரும் தொழில்நுட்-பங்கள், புது கண்டுபிடிப்புகளை எடுத்துரைத்து, மாணவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள அறிவுறுத்தினர்.தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன், சோனா கலை, அறி-வியல் கல்லுாரி முதல்வர் காதர் நவாஷ் ஆகியோர், இக்கல்லுாரியில் வழங்கப்படும் எண்ணற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற, மாணவர்களை வாழ்த்-தினர்.சோனா தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், 1,500க்கும் மேற்பட்ட முத-லாண்டு மாணவ, மாணவியர், பெற்றோருடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை