மேலும் செய்திகள்
கரடி தாக்கியதில் முதியவர் படுகாயம்
10-Aug-2024
ஆத்துார்: காட்டெருமை தாக்கியதில், பைக்கில் பைக்கில் வந்த இரு பெண்கள் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர்.ஆத்துார் அடுத்த, கல்வராயன்மலை, கீழ்நாடு, பட்டிமேடு கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மனைவி ராதிகா, 28. இவருக்கு நேற்று, உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக, தனது உறவினர் விஜி, 27, என்பவருடன் முட்டல் சாலை வழியாக பைக்கில் வந்தனர்.அதேபோல், கலியமூர்த்தி மனைவி பானுமதி, 32. இவர், உறவினர் பழனி என்பவரது பைக்கில், பின்னால் வந்து கொண்டிருந்தனர். இரவு, 7:00 மணியளவில் முட்டல் வழிப்பாதையில், ராட்-சத காட்டெருமை, முதலில் வந்த பைக் மீது தாக்கியது. இதில், ராதிகாவை கொம்புகளால் முட்டியும், கீழே துாக்கி வீசியுள்ளது. பின்னால் வந்த மற்றொரு பைக் மீதும் தாக்கியது. இதில், பைக்கில் வந்த ராதிகா, 28, பானுமதி, 32, பைக் ஓட்டி வந்த விஜி, 27, ஆகிய மூவரும் படுகாய-மடைந்தனர். இவர்கள், ஆத்துார் அரசு மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, கரியக்கோவில் போலீசார், ஆத்துார் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-Aug-2024