மேலும் செய்திகள்
வெறிச்சோடியது படகு இல்லம்
21-Oct-2024
ஏற்காடு, நவ. 10--ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். அதற்கேற்ப தீபாவளி பண்டிகை விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர்.ஆனால் சனிக்கிழமையான நேற்று, ஆங்காங்கே ஓரிரு சுற்றுலா பயணியர் மட்டுமே தென்பட்டனர். இதனால் அண்ணா, ஏரி பூங்காக்கள், படகு இல்லம், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் போன்ற இடங்களில் சுற்றுலா பயணியர் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டனர். படகு இல்லத்திலும் வெகு சிலரே சவாரி செய்து மகிழ்ந்தனர்.
21-Oct-2024