உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெண்ணிடம் தாலிபறித்தவர் கைது

பெண்ணிடம் தாலிபறித்தவர் கைது

பெண்ணிடம் தாலிபறித்தவர் கைதுகாரிப்பட்டி:காரிப்பட்டி, கருமாபுரம் அருகே வெள்ளைக்குட்டை தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி, 49. இவர் கடந்த, 2ல் வீடு முன் இருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர், கலைச்செல்வி அணிந்திருந்த, 3 பவுன் தாலிக்கொடியை பறித்துச்சென்றார். காரிப்பட்டி போலீசார், 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில் விசாரித்ததில், மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்த ராஜூ, 26, என்பதும், சேலம், குரங்குச்சாவடியில் கேட்டரிங் வேலை செய்வதும் தெரிந்தது. அவரை, நேற்று போலீசார் கைது செய்து தாலிக்கொடியை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை