சிறுநீரக கோளாறால்பாதிக்கப்பட்டவர் மாயம்
சிறுநீரக கோளாறால்பாதிக்கப்பட்டவர் மாயம்தலைவாசல்:ஆத்துார், காட்டுக்கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி சபரிராஜ், 36. சிறுநீரக கோளாறுக்கு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து மனைவி விஜயசாந்தியின் பெற்றோர் வீடான, ஆறகளூர் சென்று, கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில், 'டயலாசிஸ்' சிகிச்சை செய்து வந்தார்.பின் உடல்நிலை சரியில்லாத நிலையில், மீண்டும் சிகிச்சைக்கு செல்ல மறுத்தார். நேற்று முன்தினம் மனைவியிடம் வாக்குவாதம் செய்த அவர், வீட்டில் இருந்து வெளியேறினார். பின் வீடு திரும்பவில்லை. விஜயசாந்தி புகார்படி, தலைவாசல் போலீசார் தேடுகின்றனர்.