உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆணைவாரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஆணைவாரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஆத்துார், நள்ளிரவில் பெய்த கன மழையால், ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.சேலம் மாவட்டம், ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகளவில் இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணி முதல், நள்ளிரவு, 1:30 மணி வரை, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் கெங்கவல்லியில், 75 மி.மீ., நத்தக்கரை, 55, ஆத்துார், 18, கரியகோவில், 17, தம்மம்பட்டி, 16, வீரகனுார் 15 மி.மீ., என, மழை பதிவானது. ஆத்துார் அருகே கல்வராயன்மலை, முட்டலில் உள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சி, ஒரு மாதமாக வறண்டு கிடந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு, கல்வராயன் மலை பகுதி யில் பெய்த கன மழையால், ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'நீர் வரத்து சீராக உள்ளதால், சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர். நீர் வரத்து அதிகம் இருந்தால், சுற்றுலா பயணியருக்கு அனுமதி மறுக்கப்படும். அதே நேரம் தொடர்ந்து கண்காணிப்பு, பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ