மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தலைவாசல்: மத்திய அரசை கண்டித்து, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தலைவாசல் தாலுகா அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் ஜெயசங்கர் தலைமை வகித்தார். அதில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதோடு, வேலை நேரத்தை அதிகப்படுத்தியதாக கூறி, மத்திய அரசின் சட்ட நகலை கிழித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட குழு உறுப்பினர் காளிதாஸ், மாவட்ட இணை செயலர்கள் சின்னதுரை, அழகுவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.