தறித்தொழிலாளி தற்கொலை
கருப்பூர் அருகே சாணிகவுண்டனுார், நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், 25. மூங்கில்பாடியில், குருநாதன் என்பவரது வீட்டில், 'எக்ஸ்போர்ட்' தறி ஓட்டும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கச்சென்றார். ஆனால் நேற்று காலை அவரது தாய் மணிமேகலை சென்று பார்த்தபோது, நந்தகுமாரை காணவில்லை. தொடர்ந்து வெளியே சென்று பார்த்தபோது அங்குள்ள கொட்டாயில், அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. கருப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.