மேலும் செய்திகள்
தாம்பரம் மாநகராட்சியில் கமிஷனர் பொறுப்பேற்பு
17-Sep-2026
மேட்டூர்; மேட்டூர் நகராட்சி கமிஷனராக, 2023 செப்., 5ல், நித்யா பொறுப்பேற்றார். அவர் கடந்த ஆண்டு செப்., 18ல் இடமாற்றப்பட்டார். தொடர்ந்து ஓராண்டாக, அப்பணியிடம் காலியாக இருந்து வந்தது.இதனால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி கமிஷனர்கள் வாசுதேவன், குமரன் ஆகியோர், மேட்டூர் நகராட்சியை, கூடுதல் பொறுப்பாக கவனித்தனர்.இந்நிலையில் மேட்டூர் நகராட்சி கமிஷனராக சபாநாயகம் நியமிக்கப்பட்டு அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அலுவ-லர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
17-Sep-2026