இருதய அறுவை சிகிச்சைக்கு14 குழந்தைகள் சென்னை பயணம்
இருதய அறுவை சிகிச்சைக்கு14 குழந்தைகள் சென்னை பயணம்சேலம்:மத்திய அரசின், தேசிய குழந்தைகள் நல திட்டத்தை சேர்ந்த, 42 பள்ளி சிறார் மருத்துவ குழுக்கள் சார்பில், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, அங்கன்வாடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.அதன் தொடர்ச்சியாக, கடந்த, 23ல் சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு, தொடக்கநிலை இடையீட்டு மையம், சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் இருதய மருத்துவ முகாம் நடந்தது.அதில், பள்ளி சிறார் மருத்துவ குழுவினர் பரிந்துரைத்த, 132 குழந்தைகளுக்கு, இ.சி.ஜி., எக்கோ, ஸ்கேன் போன்ற அடுத்தகட்ட பரிசோதனை நடத்தப்பட்டன.அதில், 14 குழந்தைகளுக்கு இருதய நோய் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதனால், 14 குழந்தைகள், அவர்களுடைய பெற்றோருடன், தனி வாகனத்தில் நேற்று, சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.முன்னதாக சேலம் நாட்டாண்மை கழக கட்டட வளாகத்தில், குழந்தைகள் நல சிகிச்சைத்துறை தலைவர் சம்பத்குமார், மாநகர் நல அலுவலர் மோகன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், வாகனத்தை அனுப்பி வைத்தனர்.மருத்துவர்கள் கூறுகையில், 'பெற்றோர் விருப்பப்படி அரசு, தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.அதற்கான போக்குவரத்து, தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்துக்கும் மத்திய அரசு நிதி தருகிறது' என்றனர்.