19 இரவு பழநி மலையில் தங்க இடைப்பாடி பக்தர்களுக்கு அனுமதி
19 இரவு பழநி மலையில் தங்க இடைப்பாடி பக்தர்களுக்கு அனுமதிஇடைப்பாடி: இடைப்பாடியில் இருந்து நாளை முதல், பல்வேறு குழுவினர், காவடி எடுத்துக்கொண்டு, பல இடங்களில் ஆங்காங்கே தங்கி, ஒரு வார நடைபயணமாக பழநிமலைக்கு செல்ல உள்ளனர். அதன்படி வரும், 8ல் வெள்ளாண்டிவலசு, கவுண்டம்பட்டி ஆதிபரம்பரை வன்னியர் சமுதாய மக்கள் காவடி கட்டி, 17ல் மலையேறுவர். 9ல் காவடி கட்டும் பருவதராஜகுல மீனவ மக்கள், வரும், 19ல் மலையேறுவர். அன்று இரவு, அவர்கள் மலையில் தங்கிக்கொள்ள, பழநி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவில் மலையில் தங்க, இவர்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இடைப்பாடி பகுதிகளில் இருந்து, இந்த ஆண்டு, 50,000க்கும் மேற்பட்டோர், நடைபயணமாக பழநி மலைக்கு பல்வேறு குழுக்களாக செல்ல உள்ளனர். இதனால் இடைப்பாடி, அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்கள், வரும், 8 முதல், 23 வரை மூடப்பட உள்ளது.