2,697 அங்கன்வாடி மையம் மூலம் 2 லட்சம் குழந்தைகள் பராமரிப்பு
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆய்வு கூட்டம் மாவட்ட அளவில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:மாவட்டத்தில், 2,544 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 153 குறு மையங்கள் என, 2,697 மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 16 வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், 81 மேற்பார்வையாளர்கள், 19 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், 2,263 அங்கன்வாடி பணியாளர்கள், 1,861 உதவியாளர்கள் என, 4,240 பேர் பணிபுரிகின்றனர். அங்கன்வாடிகள் மூலம், 2.07 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.பிறந்த, 6 மாதம் முதல், 60 மாதம் வரையான குழந்தைகளின் ஆரோக்கியத்தை காக்க, முட்டையுடன் சத்தான உணவு, வீட்டில் வழங்கிட சத்துமாவு உள்ளிட்ட இணை உணவுகள் வழங்கப்படு-கின்றன. அத்துடன் குழுந்தைகளுக்கு அடிப்படை கல்வி, சுத்தம், சுகாதாரம் குறித்து கற்பிக்கப்படுகின்றன. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அங்கன்வாடி மையங்களில் சேர்க்-கலாம். அதற்கான பணிகளை ஊழியர்கள் தீவிரமாக செய்ய வேண்டும். குழந்தைகளின் எடையை இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்-கிட்டு, எடை குறைவு ஏற்படும் குழந்தைகள் குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்து சத்தான உணவுகளை தொடர்ந்து வழங்க அறிவுறுத்த வேண்டும். அங்கன்வாடி மையத்தில் குழந்-தைகளுக்கு கழிப்பறை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.