5 அகல் விளக்குகளை ஏற்றி சஷ்டி விரதம்
5 அகல் விளக்குகளை ஏற்றி சஷ்டி விரதம்வீரபாண்டி:சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கடந்த, 11ல், தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. அதற்கு பின் வந்த முதல் சஷ்டி திதியான நேற்று, கோவில் மூலவருக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து வெள்ளி கவசத்தில் பூஜை செய்யப்பட்டது. அதேபோல் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் கந்தசாமிக்கும் வெள்ளி கவசம் சார்த்தி, சர்வ அலங்காரம் செய்யப்பட்டது.தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், கோவில் கோபுரம் முன், வேண்டுதல் நிறைவேற வேண்டி, 5 அகல் விளக்குகளை, மஞ்சள், குங்குமம், சந்தனம், மலர்களால் அலங்கரித்து, வெற்றிலை மீது ஏற்றி வைத்து சஷ்டி விரதத்தை தொடங்கினர். பலர், கடும் வெயிலை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வேண்டுதல் நிறைவேற, சஷ்டி விரதம் தொடங்கினர். இதுபோன்று, 5, 7, 9 சஷ்டிகளில் விளக்கு ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.