மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
29-Aug-2024
ஆத்துார்: ஆத்துார் அருகே கோபாலபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆவணி தேர் திருவிழா கடந்த ஆக., 20ல் சக்தி அழைத்தலுடன் தொடங்கியது. நேற்று மதியம், 2:00 மணிக்கு, தேரில் சுவாமியை வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து மேளதாளம் முழங்க, திரளான பக்தர்கள் வடம்பிடித்து, முக்கிய வீதிகள் வழியே, தேரை இழுத்து வந்தனர். மாலை, 5:00 மணிக்கு தேர் கோவிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
29-Aug-2024