உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிரசவத்தின்போது தாய், சேய் பலி

பிரசவத்தின்போது தாய், சேய் பலி

சேலம், ஆக. 29-பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சம்போசிங், 30. இவரது மனைவி சஞ்சீவ்தேவி, 26. இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியில் வசித்தனர். கர்ப்பிணியான சஞ்சீவ்தேவிக்கு, கடந்த, 27ல் பிரசவ வலி ஏற்பட்டு மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில் குழந்தை வயிற்றிலேயே இறந்த நிலையில் இருப்பது தெரிந்தது. இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். பின் தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையில் அதிகளவில் ரத்தம் வெளியேறியுள்ளது. இதில் அவரும் நேற்று காலை உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ