உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளிகளில் கலைத்திருவிழா

பள்ளிகளில் கலைத்திருவிழா

சேலம்: தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு, அதன் உதவி பெறும் பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரு-வதற்கான கலைத்திருவிழா போட்டி, சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நகர்புற அளவில் நடந்து வருகி-றது. 31 பள்ளிகளை சேர்ந்த, 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும், 800க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். ஓவியம், கோலம், பானை ஓவியம், மணல் சிற்பம், காய்கறி சிற்பம், களி மண் சிற்பம் போன்ற கலை போட்டிகள், நாடகம், நாட்டியம் உள்-ளிட்ட இசை போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் மாணவியர், மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.ஓமலுார், காமாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், வட் -டார அளவில் கலைத்திருவிழா போட்டி நேற்று நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனுஜா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ கென்னடி தொடங்கி வைத்தார். நடனம், வில்லுப்பாட்டு குழு நாடகம், ஓவியம், கேலிச்சித்திரம், பறை உள்ளிட்ட போட்டிகளில், 300 மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை