உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.1 கோடி சுருட்டிய மேலாளர் கைது

ரூ.1 கோடி சுருட்டிய மேலாளர் கைது

ரூ.1 கோடி சுருட்டிய மேலாளர் கைதுசேலம்: ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின், மண்டல கடன் வசூலிக்கும் தலைமை அலுவலர் நரேந்திரகுமார், சமீபத்தில், சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதில், 'கொளத்துார் கிளை மேலாளராக, சேலம், சின்ன புதுாரை சேர்ந்த சம்பத், 38, பணிபுரிந்தார். அவர், உடன் பணிபுரியும் அலுவலர்களுடன் சேர்ந்து, 40 பழைய கடன்தாரர்களின் கணக்குகளை போலியாக உருவாக்கி, 1.11 கோடி ரூபாய் கையாடல் செய்துவிட்டார்' என கூறியிருந்தார். இதுகுறித்து விசாரித்த போலீசார், சம்பத்தை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ