தொழிலாளி கொலை2 இளைஞர்கள் கைது
தொழிலாளி கொலை2 இளைஞர்கள் கைதுஇடைப்பாடி:இடைப்பாடி, தாவாந்தெரு காட்டுவளவை சேர்ந்தவர் அங்கமுத்து, 45. திருமணம் ஆகாத இவர், விசைத்தறி கூலி வேலை செய்து வந்தார். கடந்த, 5 இரவு, 11:00 மணிக்கு இடைப்பாடி நெசவாளர் காலனியில் உள்ள டாஸ்மாக் பாரில் இருந்தார்.அப்போது இரு இளைஞர்கள், அவரிடம் மது அருந்த பணம் கேட்டனர். அவர் தர மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த இருவரும், அங்கமுத்துவை தாக்கினர். படுகாயம் அடைந்த அவர், வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். கவலைக்கிடமான நிலையானதால், 15ல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் நேற்று உயிரிழந்தார். இடைப்பாடி போலீசார் விசாரித்து, தாவாந்தெரு காட்டுவளவை சேர்ந்த தனபிரபு, 27, பேரரசு, 19, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.