உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2ம் நாளும் ஒரே மனுதாக்கல்

2ம் நாளும் ஒரே மனுதாக்கல்

சேலம்;சேலம் கலெக்டர் அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கல், 2ம் நாளாக நேற்று நடந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப்படை, சட்டம் - ஒழுங்கு போலீசார் என, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வரும், 27 வரை, வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காலை, 11:00 முதல், மதியம், 3:00 மணி வரை வேட்புமனு வழங்கலாம்.மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி, வேட்புமனுவை பெறுகிறார். சேலம், அரிசிபாளையம், தம்மண்ணன் சாலையை சேர்ந்த பிரபாகரன், சுயேச்சையாக வேட்பு மனுவை, நேற்று தாக்கல் செய்தார்.நேற்று முன்தினம் ஒருவர் மனுதாக்கல் செய்தார். ஆனால் சூரமங்கலம் தாலுகா அலுவலகத்தில், நேற்றும் ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை