மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியில் குறையும் நீரால் தெரியும் மரக்கன்று
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஜூலை, 3ல், 39.65 அடியாக இருந்தது. இதனால் வறண்டு காணப்பட்ட அணை கரையோர நீர்பரப்பு பகுதியில், வனத்துறை சமூக காடுகள் திட்டத்தில், மூலக்காடு பகுதியில், 12,500 மரக்கன்று நடவு செய்து, சிறு மூங்கில் குச்சிகளை நடவு செய்தனர். மரக்கன்றுகளும் வளரத்தொடங்கின. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரத்ததால் கர்நாடகா அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. நீர் தொடர்ந்து வந்ததால் ஜூலை, 30ல் மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் மூலக்காடு பகுதியில் நடவு செய்த புங்கன், புளியன், நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் மூழ்கின. ஒரு மாதத்துக்கு பின் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து 111.19 அடியாக நேற்று குறைந்தது. இதனால் மூலக்காட்டில் மூழ்கிய மரக்கன்று வெளியே தெரிகிறது. ஆனால் பெரும்பாலானவை அழுகி போய்விட்டன. சில சேதமாகியுள்ளன. சில அழுகாமல் உள்ளன.