பின்தங்கிய அரசு பள்ளிகளில் அச்சீவ்மென்ட் டெஸ்ட்
சேலம்: சேலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்-பட்டு வருகிறது. அதனால் கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், மிகவும் பின்தங்கியிருந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அதில் முதல் கட்டமாக, 17 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தினமும் பாடவாரியாக 'அச்சீவ்மென்ட் டெஸ்ட்' நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான பாடத்திட்டம், வினாத்தாள் உள்ளிட்டவை, பள்ளிக-ளுக்கு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நடத்தி முடிக்-கப்படும் பாடங்களை உடனுக்குடன் தேர்வு வைத்து மதிப்பீடு செய்து, அதற்கேற்ப மாணவர்களுக்கு கற்பித்தல் நடைமுறை-களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.