ஆத்துார்: போதைப்பொருள் தடுப்பு, விழிப்புணர்வு மன்றம் சார்பில் ஆத்துார் அருகே காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார்.ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் பேசுகையில், ''போதை பொருள் பயன்படுத்துவதால் உடலுக்கு தீமை தான் ஏற்படும். படிக்கும் வயதில் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர், உறவினர்களுக்கும், போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்,'' என்றார்.ரூ.1.78 கோடிக்கு மஞ்சள் ஏலம்ஆத்துார், ஆக. 18-ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. விவசா-யிகள், 1,256 குவிண்டால் (ஒரு குவிண்டால், 100 கிலோ) மஞ்-சளை கொண்டு வந்தனர். வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயித்தனர். குவிண்டால் விரலி ரகம், 13,689 முதல், 16,429 ரூபாய்; உருண்டை ரகம், 12,689 முதல், 14,629 ரூபாய்; பனங்-காலி(தாய் மஞ்சள்), 13,789 முதல், 17,369 ரூபாய் வரை விலை போனது. இதன்மூலம், 1.78 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்-தது.