உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லிப்ட் கேட்டு ஆட்டோ திருட்டு

லிப்ட் கேட்டு ஆட்டோ திருட்டு

இடைப்பாடி: இடைப்பாடி, கோணபைப் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 49. மினி ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று முன்தினம் ஆட்டோவில் நெல்மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கோழிப்பண்ணை பகுதிக்கு புறப்பட்டார்.இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் வந்தபோது, 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைகாட்டி நிறுத்தி, 'லிப்ட்' கேட்டு ஏறினார். மாலை, 5:50க்கு சேலம் பிரதான சாலையில் உள்ள கடையில் தண்ணீர் கேன் எடுக்க, வண்டியை நிறுத்திவிட்டு, ராஜமாணிக்கம் இறங்கி சென்றார். அப்போது ஆட்டோவில் இருந்தவர், ஓட்டிச்சென்றார். இதுகுறித்து ராஜமாணிக்கம் புகார்படி, இடைப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை