உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ் - மினி லாரி மோதல்; 12 பயணியர் காயம்

பஸ் - மினி லாரி மோதல்; 12 பயணியர் காயம்

அயோத்தியாப்பட்டணம்: சேலம், மேட்டுப்பட்டி தாதனுார் அருகே தேவாங்கர் காலனியில், நேற்று காலை, 7:40 மணிக்கு, அரூரில் இருந்து சேலம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த, 'ஈசர்' மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து நின்றது.இதனால், அதற்கு பின்புறம் வந்த மற்றொரு 'ஈசர்' மினி லாரி, நின்றிருந்த வாகனத்தை கடக்க, வலது புறம் ஏறிச்சென்றது. அப்போது எதிரே வந்த தனியார் பஸ்சும், மினி லாரிியும் நேருக்கு நேர் மோதியது. தொடர்ந்து சாலையோர புளியமரத்தில் பஸ் மோதியது. இதில் பஸ் பயணியர், 12 பேர், மினி லாரி டிரைவர் காயம் அடைந்தனர். காரிப்பட்டி போலீசார், மக்கள் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு,சேலத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.தொடர்ந்து விபத்தில் சேதமடைந்த பஸ், மினி லாரியை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ