உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு நிலம் ஆக்கிரமிப்பு மூன்று பேர் மீது வழக்கு

அரசு நிலம் ஆக்கிரமிப்பு மூன்று பேர் மீது வழக்கு

கொளத்துார்: அரசு நிலத்தில் அத்துமீறி புகுந்து, மரங்களை வெட்டி குடிசை போட்ட, மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கொளத்துார் ஒன்றியம், காவேரிபுரம் ஊராட்சி, குத்தேரிக்கல்காட்டில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் வெங்கடாசலம், சகாதேவன், குழந்தையப்பன் ஆகியோர் புகுந்து மரங்களை வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.மேலும், மரங்களை வெட்டி சேதப்படுத்திய இடத்தை ஆக்கிரமிப்பு செய்து குடிசை போட்டுள்ளனர். இதுகுறித்து, நேற்று காவேரிபுரம் வி.ஏ.ஓ.,விஜயகுமார் கொளத்துார் போலீசில் புகார் செய்தார். மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பாக மூவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ