உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பா.ஜ.,வை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

பா.ஜ.,வை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

பனமரத்துப்பட்டி: மல்லுாரில் காங்., சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார். மல்லுார் நகர தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். மாநில பேச்சாளர் குமரி மகாதேவன் உள்ளிட்டோர், ராகுலின் நடைபயணம் குறித்து விளக்கி பேசினர். பனமரத்துப்பட்டி மேற்கு வட்டார தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து கோவை ஓட்டல் உரிமையாளர், மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாக மத்திய பா.ஜ., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ