மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பை அகற்ற கெடு முடிந்தும் மறுப்பு
16-Aug-2024
சேலம்: சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த எட்டுக்கை மாரி-யம்மன் சிலையை, நேற்று மாநகராட்சி அலுவலர்கள் அகற்ற முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாநகராட்சி, 41வது வார்டு, சத்தியமூர்த்தி தெருவின் சாலையோரத்தில் சிறிய கல் நட்டு வைத்து, மாரியம்மனாக அப்ப-குதி மக்கள் பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வந்தனர். இரு வாரங்களுக்கு முன், அப்பகுதிவாசிகளால், எட்டடி உயர எட்-டுக்கை மாரியம்மன் சிலை அமைக்கப்பட்டு, மேலே இரும்பு தக-டுகளால் கூரை அமைக்கப்பட்டது. சாலையை ஆக்கிரமித்து கோவில் அமைப்பதால், அவற்றை இரு வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என, மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது.கால அவகாசம் முடிந்த நிலையில், நேற்று மாநகராட்சி அலுவ-லர்கள் மற்றும் போலீசார் சிலையை அகற்ற வந்தனர். முன்கூட்-டியே அப்பகுதி பெண்கள், இளைஞர்கள் திரண்டிருந்தனர். போலீசார் கூரையை அகற்றி, சிலையை எடுக்க போகும் போது, இரண்டு பெண்கள் தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் ஊற்றிக்-கொண்டனர். பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அதை தடுத்து நிறுத்தினர். இந்து முன்னணி சேலம் கோட்ட செயலாளர் சந்தோஷ் மற்றும் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்-பட்டது. இதையடுத்து மேலும், 15 நாட்கள் அவகாசம் வழங்கி, சிலையை அகற்றும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.இதுகுறித்து சந்தோஷ் கூறுகையில்,'' பல ஆண்டுகளாக சிறிய விக்ரகம் வைத்து வழிபாடு நடத்திய நிலையில், அதை பெரிய சிலையாக மாற்றியுள்ளனர். இதனால், மாநகராட்சி அகற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமாவாசை தினம் என்பதால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விசேஷ நாட்கள் நிறைவடைந்ததும், விக்ர-கத்தை வேறு இடத்தில் மாற்றி அமைத்துக் கொள்ள ஒப்புக்-கொண்டதையடுத்து, சிலை அகற்றும் பணியை ஒத்தி வைத்-தனர்,'' என்றார்.
16-Aug-2024