உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமியை கொன்ற தம்பதியிடம் காவலில் விசாரிக்க அனுமதி

சிறுமியை கொன்ற தம்பதியிடம் காவலில் விசாரிக்க அனுமதி

சங்ககிரி, நவ. 9-மகுடஞ்சாவடி அருகே வைகுந்தத்தில், கடந்த செப்., 30ல் சூட்கேஸில் சிறுமி சடலம் மீட்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையில், பெங்களூரு, பாகனபள்ளியை சேர்ந்த அபினாஷ் சாகு, 40, அவரது மனைவி அஸ்வின்பட்டில், 37, ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது. அவர்களை, கடந்த, 29ல் சங்ககிரி போலீசார் கைது செய்தனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க, சங்ககிரி நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு போலீசார் மனுதாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி பாபு, இருவரையும், 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நேற்று அனுமதி அளித்தார். இதனால் வரும், 12 வரை, தம்பதியிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை