உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீர்நிலை பாதைக்கு பட்டா வழங்கியதால் ஆர்ப்பாட்டம்

நீர்நிலை பாதைக்கு பட்டா வழங்கியதால் ஆர்ப்பாட்டம்

ஆத்துார், ஆக. 29-மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார்.அதில் கீரிப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் புறம்போக்கு, நீர்நிலை பாதைகளை, தனி நபருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்தல்; பட்டா வழங்கிய வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுத்தல்; தலைவாசல், மணிவிழுந்தானில் கூட்டு பட்டா என தவறாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தவறுகளுக்கும் வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோஷம் எழுப்பினர். இதுதொடர்பான மனுவையும், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வழங்கினர். இதில், நகர செயலர் அருள், பொதுச்செயலர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ