உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நலத்திட்ட உதவி வழங்கிய தே.மு.தி.க.,வினர்

நலத்திட்ட உதவி வழங்கிய தே.மு.தி.க.,வினர்

அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் வடக்கு, தெற்கு ஒன்றியம், பேரூர் தே.மு.தி.க., சார்பில் அக்கட்சி நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாள், கட்சி, 20ம் ஆண்டு தொடக்கம், நலத்திட்ட உதவி ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலர்கள் வெங்கடேசன், குமரிகாந்தன் தலைமை வகித்தனர்.அதில் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் இளங்கோவன், அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ''கள்ளக்குறிச்சி தொகுதியில் இருமுறை, தி.மு.க.,வினர், எம்.பி., யாக உள்ளனர். ஆனால் அயோத்தியாப்பட்டணம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை இல்லை,'' என்றார். மாவட்ட பொருளாளர் பழனிசாமி, பேரூர் செயலர் பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ