உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தோட்டக்கலை மாணவருக்கு தொழில் முனைவோர் பயிற்சி

தோட்டக்கலை மாணவருக்கு தொழில் முனைவோர் பயிற்சி

ஆத்துார்: ஆத்துார் அருகே வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், தாவரவியல் துறை படிக்கும், 50 மாணவ, மாணவியர், பேராசிரியர் குழுவினர், கடந்த ஆக., 27 முதல், நேற்று வரை, ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் தொடர்பான தொழில் முனைவோர் பயிற்சி மேற்-கொண்டனர்.ஆராய்ச்சி நிலைய தலைவர் மாலதி, மிளகு, காபி போன்ற தோட்-டக்கலை பயிர்களில் நாற்றங்கால், தொழில்நுட்பம், விதை உற்-பத்தி தொழில்நுட்பம், புது ரகங்கள் மற்றும் நவீன தொழில்-நுட்பம், ஒட்டுச்செடிகள் உற்பத்தி, மொட்டு கட்டுதல், மண் பதியன், விண் பதியன் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்து-ரைத்தார்.பயிற்சி முடிந்து நேற்று கல்லுாரிக்கு திரும்பினர். இதில் பேராசிரி-யர்கள் கார்த்திகேயன், அமரசூரியன், ராஜா, முத்துவேல், ராஜா, ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ