உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பத்திரப்பதிவு துறையை கண்டித்து விவசா-யிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பத்திரப்பதிவு துறையை கண்டித்து விவசா-யிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம்: நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசா-யிகள் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் மாநில தலைவர் வேலுசாமி தலை-மையில் மாநில பொதுச்செயலர் பழனிமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதுகுறித்து வேலுசாமி நிருபர்களிடம் கூறிய-தாவது:வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள பைரோஜி, நல்லராயன்பட்டியை சேர்ந்த சின்னாக்காள் என்பவருக்கு சொந்தமான, 1.11 சென்ட் நிலத்தை, ஒருவர் போலி கிரயம் செய்து ஏமாற்றியுள்ளார். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்ததும், சின்னாக்காள் நிலம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபோல் விவசாயிகளை பாதிக்கும் நில மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ