உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆட்டோமொபைல் கடையில் தீ ரூ.5 லட்சம் மதிப்புக்கு சேதம்

ஆட்டோமொபைல் கடையில் தீ ரூ.5 லட்சம் மதிப்புக்கு சேதம்

சேலம்: மதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார், 50; சேலத்தில் குகை பிள்-ளையார் கோவில் தெருவில் ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்துகிறார்.சேலம், கோட்டையை சேர்ந்த சுப்ரமணி, 53, மேலாளராக இருந்து கவனித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிச்சென்றனர்.நேற்று காலை, 7:00 மணிக்கு பூட்டிய கடையில் இருந்து கரும்-புகை வெளியேறியது. செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் தீயில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து விட்டதாக தெரிகிறது. மின் கசிவால் விபத்து நடந்திருக்கலாம் எனக்கூறிய, செவ்வாய்-பேட்டை போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ