உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 பேரிடம் ரூ.2 கோடி மோசடி

2 பேரிடம் ரூ.2 கோடி மோசடி

சேலம்;முதியவர் உள்பட, 2 பேரிடம், 2 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.சேலம், ரெட்டியூர், சிவாய நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 60. இவருக்கு கடந்த மார்ச்சில், வாட்ஸாப்பில் வந்த தகவலில், குறைந்த முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக தெரிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக குறைந்த தொகையை முதலீடு செய்யவே அதற்கு லாபம் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து பல தவணைகளாக, 1.35 கோடி ரூபாய் வரை, வங்கி பணப்பரிமாற்றம் மூலம் முதலீடு செய்தார். பின் சம்பந்தப்பட்டவர்களை, தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் அளித்த புகார்படி, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.பகுதி நேர வேலைஅதேபோல் சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்த, 33 வயதுடைய வாலிபர், ஆன்லைனில் டிரேடிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார். அவருக்கு டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக தகவல் வந்தது. அதை நம்பி பல தவணைகளாக, 67 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். பின் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அவர் அளித்த புகார்படி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை