உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கைத்தறி நெசவாளருக்கு இலவச மருத்துவ முகாம்

கைத்தறி நெசவாளருக்கு இலவச மருத்துவ முகாம்

மகுடஞ்சாவடி: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, மகுடஞ்சாவடி, கன்னந்தேரி ஊராட்சி சுண்டாக்கல்லில் நேற்று, திருச்செங்கோடு கைத்தறி துறை, மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. உதவி இயக்குனர் பழனிகுமார் தலைமை வகித்தார். மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி முன்னிலை வகித்தார். கன்னந்தேரி ஊராட்சி தலைவர் ராஜாமணி தொடங்கி வைத்தார். எலும்பு மூட்டு, இருதய நோய் உள்ளிட்ட பரிசோதனை மூலம் 200க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ