உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஐ.என்.டி.யு.சி., சொத்துக்களை விற்று கோடிக்கணக்கில் மோசடி

ஐ.என்.டி.யு.சி., சொத்துக்களை விற்று கோடிக்கணக்கில் மோசடி

சேலம்,:ஐ.என்.டி.யு.சி., தமிழக பொதுச்செயலர் பன்னீர்செல்வம் கூறியதாவது:தமிழகத்தில் ஐ.என்.டி.யு.சி.,க்கு, 500 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளன. அதன் வாயிலாக கிடைக்கும் வருவாயை, தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி நலன், ஓய்வு பெற்ற, நலிந்த தொழிலாளிகளுக்கு பயன்படுத்த வேண்டும். மூத்த நிர்வாகிகள் பலர், அதன் வரவு - செலவு கணக்கை தாக்கல் செய்யாமல், முறைகேடாக சுய தேவைக்கு பயன்படுத்தியிருப்பது பெரும்பாலான மாவட்டத்தில் நடந்துள்ளது.திண்டுக்கல் அருகே, ஐ.என்.டி.யு.சி.,க்கு சொந்தமான 4,000 சதுரடி நிலம், 2022ல் விற்று மோசடி நடந்துள்ளது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே, 5,000 சதுரடி நிலம் உட்பட நான்கு சொத்துக்களும், சேலம், அரிசிபாளையம், ஆர்.டி.பால் தெருவில், 3,000 சதுரடி நிலமும் விற்க முயற்சி நடக்கிறது. அதோடு சேர்ந்து, 15 கோடி ரூபாய் சொத்துக்கள், சேலத்தில் பராமரிப்பின்றி முடங்கியுள்ளன. தமிழகம் முழுதும் இதேநிலை தான். அதனால், சொத்துக்களை விற்று மோசடி நடப்பதை தடுக்க, ஐந்து பேர் அடங்கிய சொத்து மீட்பு, பராமரிப்புக்குழு, மாநில அளவில் அமைக்கப்படும். முறைகேடுக்கு துணை போகும் மூத்த நிர்வாகிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ