பூட்டப்பட்ட அம்மன் கோவில் 3 மாதங்களுக்கு பின் திறப்பு
சேலம்: சேலம், கந்தம்பட்டியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.அப்பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம் பூஜை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, 'பூஜை செய்யும் உரிமை எனக்கும் உள்ளது' என கூறியதால், இருதரப்பு தகராறு ஏற்பட்டு, கடந்த மே, 31ல் கோவில் பூட்டப்பட்டது. அறநிலையத்துறை சார்பில், பாலசுப்ரமணியம் பூஜை நடத்த அனுமதி வழங்கப்பட்-டது. இதை எதிர்த்து அண்ணாதுரை, சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் ஆர்.டி.ஓ., அபிநயா முன் நேற்று, இருதரப்பு பேச்சு நடத்தப்பட்டது. அதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு நீதி-மன்ற தீர்ப்பு வரும் வரை, பாலசுப்ரமணி பூஜை நடத்தவும், தீர்ப்-புக்கு உடன்படியவும், இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இதனால், 3 மாதங்களுக்கு பின், நேற்று கோவில் நடை திறக்கப்-பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.