சாலையில் ரூ.25,000 லஞ்சம் பெற்ற நகராட்சி பில் கலெக்டர் சிக்கினார்
ஆத்துார்: பெயரை மாற்றி, சொத்து, குடிநீர் வரி கட்ட, 25,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, நரசிங்கபுரம் நகராட்சி பில் கலெக்டரை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி விநாயகபுரம், மாரி-யம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 70; அதே பகு-தியை சேர்ந்த லட்சுமி பிரபாவிடம் வீடு வாங்கினார். தொடர்ந்து வெளிநாட்டில் உள்ள தன் மகன் கணபதி பெயருக்கு மாற்றம் செய்தார். நகராட்சியில் சொத்து பெயர் மாற்றம், சொத்து வரி, குடிநீர் வரிக்கு, கடந்த பிப்ரவரியில் மனு அளித்தார். அதற்கு பில் கலெக்டர் குணசேகரன், 39, 40,000 ரூபாய் லஞ்சம் கேட்-டுள்ளார். ராமசாமி தர மறுக்கவே, 'பணம் தரவில்லையேல் பைலை கிழித்து போட்டுவிடுவேன்' என, கூறியுள்ளார். இதனால் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம், ராமசாமி புகார் அளித்தார்.அவர்கள் ஆசோசனைப்படி நேற்று மதியம், ஆத்துார் நீதிமன்றம் எதிரேயுள்ள சாலையில் முன்பணமாக குணசேகரனிடம், 25,000 ரூபாயை ராமசாமி கொடுத்தார். பணத்தை பெற்ற குணசேகரன், தனது மொபட் சீட் கவரை திறந்து வைத்தபோது, சேலம் லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., கிருஷ்ணராஜன் தலைமையில் போலீசார், குணசேகரனை பிடித்து, 25,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். பதிவெண் இல்லாத மொபட்டில் இருந்த வரி தொடர்-பான ஆவணங்களுடன், மொபட்டையும் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.வாரிசு வேலையில் வந்தவர்ஆத்துார் மந்தைவெளியை சேர்ந்த நகராட்சி துாய்மை பணியாளர் கணேசன். ஐந்து ஆண்டுக்கு முன் இறந்ததால், அவரது பட்டதாரி மகனான குணசேகரனுக்கு, வாரிசு வேலையாக 'பில் கலெக்டர்' வேலை கிடைத்தது. ஆத்துார் நகராட்சியில் ஓராண்டு பணிபு-ரிந்தார். இடமாறுதலில் ஓராண்டுக்கு முன் நரசிங்கபுரம் வந்தார்.