உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சேலம்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், சேலம் மாவட்டம் முழுதும், 20 ஒன்றியங்களிலும், பணி புறக்கணிப்பு செய்து, உள்ளிருப்பு போராட்டம் நேற்று நடந்தது. அதில், துணை பி.டி.ஓ., இதர நிலை பணியாளர்கள் இடமாறுதல் உத்தரவு வெளியிட வேண்டும்; காலம் கடந்த நிலையில் ஆய்வு கூட்டம் நடத்துவதை கைவிடல்; மக்களுடன் முதல்வர் திட்ட முகாமுக்கு நிதி விடுவிக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.அதன்படி கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில், கிளை தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்த போராட்டத்தில் துணைத்தலைவர் குமரவேல், மாவட்ட செயலர் கார்த்திகேயன் உள்பட, 38 பேர் பங்கேற்றனர். அதேபோல் காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், பி.டி.ஓ., வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள், பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓமலுாரில் பி.டி.ஓ., உமாசங்கர், நங்கவள்ளியில் பி.டி.ஓ., பிரேமா தலைமையில் போராட்டம் நடத்தினர். ஆத்துார், தலைவாசல், தாரமங்கலம், வீரபாண்டி ஒன்றிய அலுவலகங்கள் என, மாவட்டம் முழுதும், ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ