உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை சேலம் கிழக்கு தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

நாளை சேலம் கிழக்கு தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

ஆத்துார்: நாளை, (ஆக., 28ல்,) தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது என, சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளி-யிட்டுள்ள அறிக்கை:சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம், நாளை காலை, 10:00 மணியளவில், வாழப்பாடியில் உள்ள சேலம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு தலைமையில் நடக்கிறது.மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள், ஊராட்சி கிளை செயலர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு, மாவட்ட பிரதிநிதிகள், முன்னாள், இந்நாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வா-கிகள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி