-தேசிய தடகள போட்டியில் அசத்திய செந்தில் பப்ளிக் பள்ளி மாணவியர்
சேலம் :உத்தரப்பிரதேசம், வாரணாசியில், தேசிய அளவில் தடகள போட்டி, கடந்த, 10 முதல், 13 வரை நடந்தது. அதில் சேலம், செந்தில் பப்ளிக் பள்ளியை சேர்ந்த மாணவியர் லக்ஷ்யா, தங்கம், வெள்ளியும் சங்கநிதி வெள்ளியும் வென்றார். அவர்களுக்கு, பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் செந்தில் சி.கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செயலர் தனசேகர், தாளாளர் தீப்தி, நிர்வாக அதிகாரி சுந்தரேசன், முதல்வர் மனோகரன், துணை முதல்வர் நளினி, நிர்வாக அலுவலர் பிரவீன் குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், இரு மாணவியரையும் பாராட்டினர். மேலும் மாணவியரின் வெற்றிக்கு துணையாக இருந்து பயிற்சி அளித்த சுரேஷ், பார்த்திபன், பாரதி ஆகிய பயிற்சியாளர்களுக்கும், பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.