உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் ஏர்போர்ட் போலீசுக்கு சென்னையில் சிறப்பு பயிற்சி

சேலம் ஏர்போர்ட் போலீசுக்கு சென்னையில் சிறப்பு பயிற்சி

ஓமலுார்: சேலம் விமான நிலைய பாதுகாப்புக்கு இன்ஸ்பெக்டர் உள்பட, 32 பேர் பணியில் உள்ளனர். அதில் விமான நிலைய பயிற்சி பெறாத பலரும் உள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களுக்கு தற்போது சிவில் விமான பாதுகாப்பு ஆணையம் சார்பில், நேற்று முதல் வரும், 26 வரை, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்கு மாநிலத்தில் இருந்து பலர் சென்னை விமான நிலைய பாதுகாப்பு பயிற்சி மையத்துக்கு சென்றுள்ளனர். அதன்படி சேலம் விமான நிலையத்தில் இருந்து, எஸ்.எஸ்.ஐ., பானுமதி, ஏட்டுகள் குப்புசாமி, தனகோடி, போலீஸ்காரர் ஜோதி ஆகியோர், பயிற்சிக்கு சென்றனர். மற்றவர்களுக்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி