ஹோட்டலில் ரகளை எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்
தர்மபுரி:தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலுள்ள புறக்காவல் நிலைய, எஸ்.எஸ்.ஐ., காவேரி. இவர், மருத்துவமனை எதிரே உள்ள ஹோட்டலில் சாப்பிடுவது வழக்கம். கடந்த மாதம், 28ம் தேதி, அந்த ஹோட்டல் உரிமையாளரின் மகன் முத்தமிழ் என்பவர், அந்த எஸ்.எஸ்.ஐ.,யிடம் பழைய பாக்கியை கேட்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவேரி, தன் காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி, முத்தமிழை அடிக்க முயன்றார். இது, கடையிலுள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவானது. அதையறிந்த, மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் நேற்று காவேரியை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.