உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இறந்தவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பால் போராட்டம்

இறந்தவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பால் போராட்டம்

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, மண்மலை ஊராட்சி, முடக்குப்பட்டியை சேர்ந்தவர் கூலித் தொழி-லாளி கர்ணன், 50. இவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது உடலை, முடக்குப்பட்டி கரடு பகுதியில் அடக்கம் செய்வதற்கு சென்-றனர். அப்போது, விவசாயிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இறந்தவரது சடலத்தை வைத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கெங்-கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன், தம்மம்-பட்டி போலீசார், விவசாயிகளிடம் பேச்சு-வார்த்தை நடத்தினர்.அங்குள்ள கரடு பகுதியில் தீ வைத்தால், வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் என, விவ-சாயிகள் தெரிவித்தனர். தாசில்தார் பேச்சுவார்த்-தைக்கு பின், கரடு பகுதியில் உடல் அடக்கம் செய்வதற்கு ஒப்புக்கொண்டனர். அதன்பின், இறந்தவரது சடலத்தை அடக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை