உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இரு தரப்பினர் பிரச்னை தாசில்தார் பேச்சில் சமரசம்

இரு தரப்பினர் பிரச்னை தாசில்தார் பேச்சில் சமரசம்

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே உலிபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்தாண்டு கும்பாபி ேஷகம் நடந்தது. அதன் முதலாம் ஆண்டு விழாவை, இன்று நடத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் இருதரப்பினர் இடையே பிரச்னை எழுந்தது. இதனால் நேற்று கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில் இருதரப்பினரும் விட்டுக்கொடுக்காததால் அறநிலையத்துறை செயல் அலுவலர் முன்னிலையில், சுவாமி கருவறையில் பூசாரி பூஜை செய்து கொள்ளலாம்; இருதரப்பினரும் பங்கேற்று வழிபடலாம் என, தாசில்தார் தெரிவித்தார். இதை இருதரப்பினர், ஊர்மக்கள் ஏற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை