உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேய்பிறை அஷ்டமி பிரித்தியங்கிராதேவிக்கு பூஜை

தேய்பிறை அஷ்டமி பிரித்தியங்கிராதேவிக்கு பூஜை

ஆத்துார்: தேய்பிறை அஷ்டமியையொட்டி, பிரித்தியங்கிராதேவிக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. ஆத்துார், கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று, பிரித்தியங்-கிராதேவி மற்றும் ஸ்வர்ண பைரவருக்கு சிறப்பு அபி ேஷக பூஜை நடந்தது. அப்போது, புஷ்ப அலங்காரத்தில் பிரித்தியங்கிரா-தேவி, ஸ்வர்ண பைரவர் அருள்பாலித்தனர். முன்னதாக, உலக நன்மை, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.* தலைவாசல் அருகே, ஆறகளூரில் உள்ள காமநாதீஸ்வரர் கோவிலில் எட்டு திசைகளிலும், உன்மத்தர், ருருவர், குரோ-தானர், சண்டர், பீஷ்ணர், கால சம்ஹாரர், கால பைரவர் உள்பட எட்டு பைரவர்கள் சிலைகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமி மற்றும் கோகுலஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு, பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட, 16 வகையான அபி ேஷக பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் கால பைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதேபோல், வீரகனுார் கங்காசவுந்தரேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.* தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில் ஆவணி மாத தேய்-பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு பால், தயிர், சந்தனம் உள்-பட, 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்-தனர். தொடர்ந்து சுவாமிக்கு சந்தனம், பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. சந்தன காப்பு அலங்கா-ரத்தில் இருந்த கால பைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசித்-தனர். பக்தர்கள் தேங்காய், வெள்ளை பூசணியில் தீபம் ஏற்றி வழிபட்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை